Kappaleri Poyachu-Life in the UK | Tamil podcast about British history and culture
What is podcast in Tamil?
இன்னைக்கு FM (Radio) லே போடும் நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் நீங்க நினைச்சா டவுன்லோட் (download) பண்ணி நாளைக்கு கேட்கமுடியுமா? அது முடியது. என FM/radio எல்லாம் நேரடி பதிவுகள் (live broadcasts). அது மட்டும் இல்லாம ரேடியோ ஷோஸ்ல நிறைய ப்ரொக்ராம்ஸ் இருக்கும், பழைய பாடல்கள், ஏதாவது கேள்வி-பதில் செக்மென்ட், இன்டர்வியூ, புது பாட்டுனு வித்தியாசமான நிகழ்ச்சிகள் இருக்கும். அதனால ஒரு முழு நாள் ரேடியோ ஷோல்ல உங்களுக்குப் புடிச்ச செக்மெண்ட்ஸ் கோஜம் தான் இருக்கும்.
பாட்காஸ்ட் (Podcast) அடிப்படையில் இன்டர்நெட்லே பப்ளிஷ் (publish/upload) பண்ணுன ஆடியோ பதிவுகள். இப்ப நிறைய வீடியோ பதிவுகளும் வந்துட்டு. ஒவ்வொரு போட்காஸ்டும் ஒரு குறிபிட்ட டாபிக்ல தான் இருக்கும். பாட்காஸ்ட் ஷோஸ் அவங்களுக்கு வசதியான நேரத்தில்தான் வாரத்துக்கு ஒன்னு இல்ல ரெண்டு எபிசோடுஸ் அப்லோட் பண்ணிடுவாங்க. அந்த டொபிக்ஸ்லே ஆர்வமுள்ளவர்கள் போட்காஸ்ட் தளங்கள்ள தேடி அத கேட்பாங்க.
உங்களுக்கு புடிக்காத வானொலி நிகழ்ச்சிகள கேட்பதுக்கு பதிலா, உங்களுக்கு புடிச்ச தலைப்புகள்ள இருக்கும் போட்காஸ்ட் ஒண்ண நீங்க கேட்கலாம்.
அது மட்டுமா? பாட்காஸ்ட்களைக் கேட்பது இலவசம்! இலவசம்! இலவசம்!
அதனால FM/Radioல ஓடும் மொக்கையான பாட்டு எப்ப முடியும்னு அவஸ்தி படுவதற்கு பதிலா, உங்களுக்கு பிடித்த போட்காஸ்டைப் பதிவிறக்கம் (download) செய்து, பஸ்ல போகும்போதோ பாத்திரம் கழுவும்போதோ சந்தோஷமா கேளுங்கள்!
To summarize, podcasts are pre-recorded audio or video that can be downloaded and played anytime you want. Podcasts are of specific topics and subjects, so you can find a community of people with similar interests to you, wanting to listen to the same topic. Tamil podcasts are recordings of specific topics in our language, Tamil! So are you sick of only finding history podcasts in English? Now if you search for 'podcast in tamil' or 'tamil podcast' you will have a range of topics to listen to on a lot of different platforms. Almost all of them are free!
Radio
- Life broadcasting - will miss a show if you are not tuned-in at that the time the show is running
- Varied segments throughout the day-you may be stuck listening to a program you do not enjoy
- Sometimes you lose signal and cannot tune-in to a radio/FM
Podcast
-
- Pre-recorded - you can download the episodes and listen to them anytime you want
- Specific topics - if you listen to a tamil podcast about British history, you will only get that
- Not dependent on radio signals - so you can listen to them in your flight, in the tunnel, and even during a hurricane